About Us

   We look at the sky, the ocean, the sun, the moon and the stars, they stare back at us. Every grain of sand, every atom in the universe has an eye unbound by time. Only such a vision can reveal what mankind is, to mankind. It escapes the limits of creed, religion, language, God and every other dogma. It is enlightenment’s tool. Its name is Thirukkural.

   133, this number can be considered a scared symbol for the Tamil race, Thirukkural’s 133 chapters have such an impact. To deal with such wisdom was like pulling out the Egyptian pyramid stone by stone and putting it together back exactly at the heart of a city. We were digitizing a literary monument.

   Thiruvalluvar had been a catalyst to our chat chemistry for years, some topic must have peaked, suddenly there was a challenge in front of us.

   “If you are so enchanted by Thirukkural, why don’t you do a modern interpretation”. Thus, on a stormy night the ball had started to roll. The initial idea was to pack the verse and its meaning into a disc and release it. Then the obsession started to growl, and it had become a demanding demon, we were enslaved to it. We did whatever it commanded, we wrote a modern interpretation of the 1330 verses, composed 133 musical pieces, did a research on ancient Tamil fresco art and created 133 paintings, recorded voice artists and to ensure that this project gets written in stone, we sculpted 133 statutes. To put it in a nutshell, we had climbed this number up and down like a scared stairway.

   The project started in 2015, and has progressed in majestic steps, so far. The mobile application will be released this may. To ensure you fall in love with Thirukkural, all you need is a push from our mountain cliff.

   வானத்தையும்,சமுத்திரத்தையும்,சூரியனையும் சந்திரனையும்  நட்சத்திரங்களையும் நாம் பார்க்கிறோம். அவைகளும் நம்மை பார்க்கின்றன ஒரு மண் பருக்கையும் ஒவ்வொரு அனுக்களும் காலத்தை சலனமில்லாமல் பார்க்கும் கண் கொண்டுள்ளன, அத்தகைய பார்வையினால் தான் மனிதனிற்கு மனிதனயே காண்பிக்க முடியும். அது இனம்,மதம்,மொழி,தெய்வம் போன்ற பேதங்களுக்கு அப்பாற்பட்டது அது ஒரு ஞானக்கருவி. அதன் பெயர் திருகுறள்.

   133 இது தமிழர்களுக்கு புனித எண் ஆகுமளவு தாக்கம் மிகுந்த ஒரு இலக்கிய படைப்பு திருக்குறள். திருக்குறளை தூசிதட்ட எங்களுக்கு ஞானம் போதாது, நாங்களே தூசிகளாக மாறினோம், எகிப்தில் இருக்கும் பிரமேடை, ஒருஒரு கல்லாய் அகற்றி, நகரதிற்கு நடுவில் அப்படியே அடுக்குவதை போன்ற இராட்சஸ வேலை இது.

   எங்கள் அரட்டைகளில் திருவள்ளுவர் பல வருடங்களாக சிக்கியிருந்தார் என்று சொன்னால் மிகையாகாது. தீடிர் என்று ஒரு நாள் முளைத்த கேள்வி.

   “இவ்வளவு வாயாடர நீ திருக்குறள புதுசா குடுக்குறது தான” யார் யாரை கோதாவில் இறக்கியது என்று நினைவில்லை. ஏதோ ஒரு புயல் ராத்திரியில் இவ்வேலைகளை தொடங்கியாயிற்று. செய்யுளும், உரையுமாக தகட்டில் அடைத்து கொடுத்துவிடலாம் என்ற எளிமையான வரைவில்  ஆரம்பிக்கப்பட்ட முயற்சி, வாரம் வாரம் காரம் பிடித்தது. பூதாகரம் அடைந்தது. பின்பு அந்த பூதத்திற்கு நாங்கள் அடிமையாகிவிட்டோம். ஏவியதையேல்லாம் செய்து கொடுத்தோம். திருக்குறளிற்கு புத்தம்புது உரை  எழுதி, இசையமைத்து குரல் கலைஞர்களை ஒலிப்பதிவு செய்து, பழந்தமிழ் குகைஒவியங்களின் பாணியை ஆராய்ச்சி செய்து நவினத்துவமான ஒரு தீர்மானதிற்கு வந்து. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பொருள் நவிலும் ஓவியங்கள். வரைந்து  திருக்குறளின் சாரத்தை 133 சிற்பங்களாக செதுக்கி, 133 என்ற எண்ணை கோவில் படிக்கட்டுகள் போல் பலமுறை ஏறி இறங்கியிருக்கிறோம்.

   2015 ஆம் ஆண்டு தொடங்கி இலக்கை நோக்கி அசராமல் நகர்ந்து கொண்டிருந்தோம். எதிர்பார்ப்பின் கூரையை துறத்திகொண்டே எங்கள் படைப்பு அழகாய் வளர்ந்து வருகிறது. மொபைல் அப்ளிகேஷன் வரும் மே மாதம் வெளியிடப்படும் என்று ஒரு ஆருடம். வள்ளுவத்தின் மேல் காதலில் விழ, வல்லமையுடன் உங்களுக்கு ஒரு தள்ளு தேவை, எங்கள் மலையுச்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.